யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.பல்கலையில் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்ற போதிலும் அவர்கள் முன்னிலையில் விஞ்ஞான பீடத்தின் 2 ஆம் வருட மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலினால் சிலர் காயமடைந்தனர். இதனால் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7 பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்