சிறிலங்கா இராணுவ தளபதியாக போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் சவேந்திர சில்வாவிற்கு நியமனம் வழங்கப் போவதில்லை என்று தனது நம்பத்தகுந்த அமைச்சர்களுக்கு உறுதியளித்திருந்தார் .அயினும் சிறிலங்கா
ஜனாதிபதி சிறிசேன அவருக்கு நியமனத்தை வழங்கியள்ளார்.
இதே வேளை கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா ஜனாதிபதி 31 கேணல்களை பிரிகேடியர்களாக பதவியுயர்த்தியிரந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.