போர்க்குற்றவாளி சவேந்திராவின் நியமனத்துக்கு அமெரிக்கா கவலை! - Kathiravan - கதிரவன்

Breaking

Monday, August 19, 2019

போர்க்குற்றவாளி சவேந்திராவின் நியமனத்துக்கு அமெரிக்கா கவலை!


சிறிலங்காவின் இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் தலைமையிலான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று (19) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.