அண்மையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் லண்டனில் உள்ள ‘விம்பம்’கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாய் திரள்வோம் புத்தக அறிமுகக் கூட்டத்திலும்,
அதன்பிறகு நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ள இரண்டு நாள் நிகழ்வுகளுக்காக கடந்த ஆகஸ்ட் 24, 25 சென்றிருந்தார்.
இதில் அமைப்பை திரள்வோம் எனும் புத்தக அறிமுக கூட்டத்தில் கேள்வி கேட்க முனைந்த ஈழத் தமிழர் ஒருவரால் சலசலப்பு ஏற்பட்டுஅவரை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் வெளியேற்றியும் விட்டனர்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகக பரவியது, பல்வேறு விமர்சனங்கள் திருமாவளவன் மீது தமிழகத்தை சார்ந்தவர்களும்,ஈழ இணைய வாசிகளும் முன்வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கம் கொடுக்கும் வகையில் பேசியுள்ள திருமாவளவன் சமூக வலைத்தளங்களில் பேசுமளவுக்கு ஒன்றும் அங்கு அதிர்ப்தியாக நடைபெறவில்லை என்றும் , அதில் கேள்வி கேட்க முனைந்தவர்.
கைகளில் திமுக தலைவர் கருணாநிதி படங்களும் , சோனியாகாந்தி படங்களும் தான் வைத்திருந்தார் அதையே கிழித்தெறிந்தார் என்றும் , அவரிடம் நான் பேசி முடிந்ததும் கேள்விகளை எதிர் பார்த்ததாகவும் அனால் ஏற்பாட்டாளர்கள் அவர் தொடர்ந்து இருந்தால் நிகழ்ச்சிக்கு இடையூர்க இருக்கும் என்று தெரிவித்து வெளியேற்றினார்.
அதன் பின்பு அங்கே கூச்சல் போட்ட நபரே என்னிடம் தொலைபேசியில் பேசினார்,ஒரு ஆதங்கத்தில் பேசிவிட்டோம் , உங்கள் உதவிகளையும் செயல்பாடுகளையும் மறக்கவில்லை என்று என்னிடம் வருத்தப்பட்டர்.
சிறிதாக இடம்பெற்ற ஒரு விடையத்தை பூதாகாரமாக்கி தமிழகத்தில் இருந்து செயல்படும் சாதியவாதிகளும் மத வாதிகளும் , தமிழ்தேசியம் எனும் பெயரில் தமிழர்களை பிரித்தாளும் நபர்களாலும் செய்திகள் தவறாக காண்பித்து எம்மீது களங்கம் கற்பிக்கின்றார்கள், அவர்கள் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.
ஈழத்தமிழர்கள் என்மீது விமர்சம் வைக்கலாம் அனால் சில தமிழ்நாடு அரசியல் வாதிகளின் சிலரின் பிழையான தூண்டுதலினால் இந்த நிகழ்வு பற்றி தவறான செய்தியும்,தவறான புரிதலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் பின் ஈழத்தில் போரின் இறுதிவரை இருந்து போராடி பல தியாகங்கள் செய்த முக்கிய போராளிகள் என்னுடன் தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்து பேசினார்கள்.
அது என்னுடைய வழமையான சந்திப்பாகவே அமைந்தது, அவர்களே என்னிடம் இந்த சம்பவம் குறித்து பேசும்போதும் இந்த வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஈல்லாம் போராட்டத்து எந்த உதவிகளும் செய்யாதவர்களாகவும் , பங்களிப்பு இல்லாதவர்களும் , அதன் உண்மை நிலை விளங்காதவர்களாகவும் இருப்பவர்களே என குறிப்பிட்டார்.
எனவே கட்சி தோழர்களுக்கும்,என்மீது பற்றுகொண்டவர்களும் இவர்களின் விமர்சனங்களை புறம்தள்ளிவிட்டு வீரியத்தோடு செயல்படுங்கள் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பல ஈழ உணர்வுள்ள அரசியல் தலைவர்களை வெளிநாட்டில் அவமதிப்பு செய்து அதை விளம்பரப்படுத்தி தமிழக அரசியலில் லாபம் தேடி ஈழத்தமிழர்கள்களிடம் நன்மதிப்பு பெற முனைவது அண்மைக்காலமாக நாம்தமிழர் கட்சி என்பதே பல தமிழ்ஈழ உணர்வாளர்களின் எண்ணம்.
பல ஈழ உணர்வாளர்கள் பிரிந்து தனித்தனியாக செயல்பட காரணமானவர்களே சீமானின் நாம்தமிழர் கட்சியினர் என பல வருடங்களாக களத்தில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் கூறிவருவது...
அப்படியான சூழலை ஈழத்தமிழர் மத்தியிலும் உருவாக்க முனைவது புலம்பெயர் தமிழர் பலரின் கருத்து , அதற்கு சாட்சியாக புலம்பெயர் நாடுகளில் நாம்தமிழர் கட்சி தொடங்க பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனால் திருமாவளவன் மீது மரியாதை உண்டு என்று கத்தும் சீமான் இந்த விடையம் தொடர்பில் வாயே திறக்கவில்லை,அனால் அவரின் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து வசைபாட வைத்துள்ளார்.
இது பல்வேறு நிலைகளில் ஈழ உணர்வாளர்களுக்கு எதிராக சீமான் மேற்கொள்ளும் முறையே எனலாம்.
அனால் இந்த நிகழ்வு தொடர்பில் திருமாவளவன் தெரிவித்ததில் இருந்து வெளிப்படையாக தமிழ் தேசியம் என்று பேசும் சில பிற்போக்கு சிந்தனை வாதிகள் என கூறியிருப்பது நாம்தமிழர் கட்சியை என்பது குறிப்பிடத்தக்கது