பிரித்தானியாவில் 24 வயது இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 27, 2019

பிரித்தானியாவில் 24 வயது இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம்!பிரித்தானியாவில் பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களு வந்த மூன்று பேர் பெண் ஒருவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.

பிரித்தானியாவின் பிர்மிங்காமில் கடந்த ஜுலை மாதம் 26-ஆம் திகதி மாலை 6 மணிக்கு Amy-Leigh Hill(24) என்ற பெண் தன்னுடைய காரை எடுப்பதற்காக சென்ற போது, அப்போது திடீரென்று அவரை பின் தொடர்ந்து வந்த முகமுடி அணிந்திருந்த நபர் ஒருவர் கையில் ஒரு ஆயுதத்தை வைத்து அவரை தாக்க, அடுத்தடுத்து இரண்டு முகமுடி அணிந்திருந்த நபர்கள் வந்து அவரை தள்ளி விட்டு கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கி கார் சாவியை கொடுக்கும் படி கேட்டுள்ளனர்.


அப்போது இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் சண்டை போட்டுள்ளார். அந்த காரின் உள்ளே அவரின் மூன்று வயது மகன் இருந்துள்ளார்.

அதன் பின் காரை திறந்து ஓட்ட முற்பட்ட போது, அவர்கள் திடீரென்று அங்கிருந்து ஓடுகின்றனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், பொலிசார் இது குறித்த வீடியோவை வெளியிட்டு, இந்த முகமுடி நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.


மேலும் அவர்கள் திருட வந்த கார் மிகவும் விலையுயர்ந்த ஆடி கார் எனவும், அதன் மதிப்பு சுமார் 55,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறிய அளவிலான காயம் தான் எனவும், ஆனால் இந்த சம்பவத்தை காரின் உள்ளே இருந்த பார்த்த அவரின் மகன் மட்டும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாக Amy-Leigh Hill தெரிவித்துள்ளார்.