நாட்டை காப்பாற்றுவதற்கு காணப்படும் இறுதி சந்தர்ப்பம் இது என கெட்டம்பே ராஜோபவனாராமாதிபதி கெப்படியாகொட சிறிவிமல தேரர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று மாலை தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே தேரர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டை காப்பாற்றுவதற்கு காணப்படும் இறுதி சந்தர்ப்பம் இது.
நாட்டைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்து பாரிய பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் கெட்டம்பே ராஜோபவனாராமாதிபதி கெப்படியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்