வெள்ளப் பெருக்கு- 184 பேர் பலி, ஒரு மில்லியன் பேர் இடம்பெயர்வு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 13, 2019

வெள்ளப் பெருக்கு- 184 பேர் பலி, ஒரு மில்லியன் பேர் இடம்பெயர்வு!இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அகப்பட்டு 184க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.அதேவேளை சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களைத் இடம்பெயரந்து தற்காலிக முகாம்கில் தங்கவைத்துள்ளனர்.கேரளாவில் மோசமான நிலை காணப்படுகிறது.கொச்சி அனைத்துலக விமானநிலையம் மூனறு நாட்களாக மூடப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் குறைந்தது 42 பேர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர்..உயரும் வெள்ளநீர் மட்டத்தால் முக்கிய நெடுஞ்சாலைகளும் சாலைகளும் சேதமடைந்துள்ளன

அல்லது துண்டிக்கப்பட்டுள்ளன.முப்படையினரும் அவசரகால அதிகாரிகளும் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேற்கில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 66 என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.