கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐயப்பன் சுவாமியை தரிசிக்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
மற்றும் கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதனால் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதோடு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுவதினால் பாதைகளுக் மூடப்பட்டுள்ளது , மின்சாரம் மற்றும் சில இடங்களில் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளத்க கூறப்படுகிறது , இதனால் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.