அம்பாறையில் திடீர் சுற்றிவளைப்பு -20 ற்கும் மேற்பட்டவர்கள் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 6, 2019

அம்பாறையில் திடீர் சுற்றிவளைப்பு -20 ற்கும் மேற்பட்டவர்கள் கைது

அம்பாறை பிராந்திய போக்குவரத்து பொலிஸார் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது இன்று காலை முதல் மாலை வரை அக்கரைப்பற்று சம்மாந்துறை காரைதீவு கல்முனை மருதமுனை நற்பிட்டிமுனை நாவிதன்வெளி நிந்தவூர் சாய்ந்தமருது போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விழிப்பூட்டல் செயற்பாடுகள், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்ல்லுதல் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.

அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை அக்கரைப்பற்று கல்முனை உள்ளிட்ட பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் தலைமையில் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் இரண்டு மணிநேரத்தில் மாத்திரம் 20க்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதோடு, 40க்கும் மேற்பட்டவர்களிற்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டு்ள்ளது.

இதேவேளை போக்குவரத்து பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்த சமூக அமைப்புக்களும், அப்பகுதி மக்களும் இவ்வாறான நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.