யாழில் அதிகாலை இரகசியமாக கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் செய்த காரியம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 24, 2019

யாழில் அதிகாலை இரகசியமாக கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் செய்த காரியம்யாழில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 6.30 மணியளவில் எந்த அறிவித்தலுமின்றி, இரகசியமாக அலுவலகம் திறக்கப்பட்டது.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வேண்டாமென காணாமற்போனரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். அத்தோடு இந்த அலுவலகத்தை யாழில் திறப்பதற்கும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்தோடு இந்த அலுவலகம் இன்றைய தினம் யாழில்திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கருஐயசூரிய மற்றும் அமைச்சர் மனே கணேசன் ஆகியோரால் திறந்து வைக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று அதிகாலை வேளையில் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.