கொழும்பு - கந்தானை பிரதேசத்தில் பல வீடுகளில் கைவரிசையை காட்டிய திருடர்களை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பல நாட்களாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று இச்சம்பவங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்
இது போன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.