ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, "ஆர்டர் ஆஃப் சைஸட், " நாட்டின் உயரிய சிவிலியன் விருது வழங்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அனால் இந்த விருது வழங்குவதற்கு மனிதா உரிமை செயல்பட்டளர்கள் பொதுமக்கள் , முஸ்லிம் மக்கள் இடத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காரணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீர் மீதான இந்திய அரசாங்கத்தின் சமீபத்திய ஒடுக்குமுறையை கருத்தில் கொண்டே
பல சமூக ஊடக பயனர்கள் எமிரேட்ஸ் திட்டத்தை கடுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளனர்.
அனால் "Zayed, எனும் விருது " மோடிக்கு வழங்கப்படுவது குறித்து ஏப்ரல் மாதமே தாங்கள் முடிவெடுத்து விட்டதாக இளவரசர் சார்பில் கூறியுள்ளனர்.
காஷ்மீர் மீதான இந்தியாவின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்கு எதிராக 300 போராட்டங்கள் மற்றும் மோதல்கள் அண்மை வாரங்களில் நடந்துள்ளன என சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த நிலையில் மோடிக்கு வழங்கவுள்ள விருது குறித்து பாரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.