எழுக தமிழ் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒதுங்கியிருக்கின்ற நிலையில் அற்கான பரப்புரை இன்று ஆரம்பமாகியிருந்தது.நல்லூர் முன்றலில் காலை 6.30 மணிக்கும், யாழ்.பேரூந்து நிலையத்தில் காலை 8.30 மணிக்கும் ஆதரவு கோரும் துண்டுபிரசுர விநியோகம் ஆரம்பமாகியிருந்தது.
தமிழ்மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரமுகர்கள், கட்சித் தலைவர்கள் மற்றும் எழுகதமிழ் 2019 இற்கு ஆதரவு தரும் தரப்பினரென பலரும் பங்கேற்று ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் வடமாகாண முதலமைச்சரும்,தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன் நேரடியாக களமிறங்கி துண்டுபிரசுரங்களை விநியோகித்திருந்தார்.
அதே போல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமசந்திரன்,நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் என பலரும் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.