இறுதிப் போரின் போது சர்வதேச சட்ட திட்டங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் மனித உரிமைகளை பேணியிருந்தோம் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்,
போரின்போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த மக்களை படையினர் மீட்டெடுத்தமை அவர்களது மனிதநேயத்திற்குச் சான்று.
நாட்டை அது எதிர்கொள்ளும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களில் இருந்தும் பாதுகாப்பேன். தாய்நாட்டின் இறைமை, பிரதேச ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றினை பாதுகாப்பதில் இராணுவத்திற்கு இராணுவதளபதி என்ற அடிப்படையி;ல் உரிய தலைமைத்துவத்தை வழங்குவேன். அனைத்து அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமும் இந்த நாட்டின் அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். என்றார்.
இதேவேளை போர் குற்றம் சாட்டப்பட்டவராக காணப்படும் சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஐநா, ஐஒ மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.