யாழ்.கோப்பாயில் சற்று முன் கோர விபத்து!! - இளைஞர் பரிதாவ சாவு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 8, 2019

யாழ்.கோப்பாயில் சற்று முன் கோர விபத்து!! - இளைஞர் பரிதாவ சாவு


யாழ்ப்பாணம் உரும்பிராய் - கோப்பாய் வீதியில் கோப்பாய் கிருஸ்ணன் கோவிலடியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இயக்கச்சியைச் சேர்ந்தவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.   மோட்டார் சைக்கிள் (எம்டி90) ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில்

பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் (பல்சர்) மோதி நிலைகுலைந்து டிப்பர்  வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது

என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  சம்பவத்தையடுத்து பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.