இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள், சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான (30) இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி நடைபெற்றது.