வட ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டில் கால்பந்து மைதானத்தில் திடீரென புகுந்த வெள்ளம் காரணமாக 7 பேர் பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை மைதானத்தின் அருகே இருந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வந்த நிலையில் திடீரென வெள்ளநீர் கால்பந்து மைதானத்தில் புகுந்தது.
இதனால் கால்பந்து போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகி இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன் என்றும் இன்னொருவர் சமீபத்தில் திருமணமான 35 வயது நபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.