உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் ஊர் குருவி பருந்தாகாது – ரணில் பேச்சு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 11, 2019

உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் ஊர் குருவி பருந்தாகாது – ரணில் பேச்சுஉடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 10 வருடங்களாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

குருநாகலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் விசேட சக்தி ஏதும் கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாரளாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அறிவிக்கப்பட்டார்.  பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர் பொறுப்பைப் பொறுப்பேற்றுக் கொண்ட எதிர்ச்சட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கருத்தை முன்வைத்துள்ளார்.