யாழில் வெடிவிடும் கோத்தா தொண்டர்கள்? - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, August 11, 2019

யாழில் வெடிவிடும் கோத்தா தொண்டர்கள்?


அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபயா ராஜபக்ஷவை மகிந்த அறிவித்துள்ள நிலையில் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோத்தாவின் படம் தொங்கவிடப்பட்ட வாகனமொன்று சகிதம் சந்தி தோறும் இந்த கும்பல் வெடி கொழுத்தி கொண்டாடிவருகின்றது.

இதனிடையே லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டதால் தற்போது எதிர்கட்சித் தலைவராக உள்ள மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமை மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போகும் என குறிப்பிடப்படுகின்றது. 

ஒரு கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் ஒருவர் அந்தக் கட் சியின் உறுப்புரிமையிலிருந்து விலகினால் அவரது ஆசனம் இல்லாமல் போய்விடும் என்பதே இலங்கை அரசியலின் சட்டமாகும்.

நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்ட கட்சியில் உள்ள ஒருவர் வேறு கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட உடனேயே அவரது உறுப்புரிமை ரத்தாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.