அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்.
தேசிய பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளன. நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும்.
எந்த முதல்வரும் படைக்காத சாதனையை முதலமைச்சர் படைத்து வருகிறார், அவர் மீது உள்ள ஆதங்கத்தில் முதல்வரின் அமெரிக்க பயணத்தை ஸ்டாலின் குறை கூறுகிறார்.
கமலின் கட்சி மழையில் முளைத்த காளான் போன்றது அந்த கட்சிக்கு கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை என கூறினார்.