புத்தளத்தில் வயிற்றில் சத்திர சிகிச்சை செய்ய சென்ற பெண்ணுக்கு ஏற்ப்பட்ட விபரீதம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 6, 2019

புத்தளத்தில் வயிற்றில் சத்திர சிகிச்சை செய்ய சென்ற பெண்ணுக்கு ஏற்ப்பட்ட விபரீதம்!

புத்தளத்தில் வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்ற வயோதிப தாயின் கையை வெட்டி அகற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான தாய் ஒருவர் கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக மாரவில வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் இரு நாட்களின் பின்னர் சத்திர சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இதன் போது அவரது கையை வெட்டி அகற்றிய வைத்தியர்கள் தற்போதும் அவரை அவசர சிகிச்சை பிரிவு அறையிலேயே வைத்துள்ளனர்.

வைத்தியர்களின் கவனயீனத்தால் நடந்த இந்த விபரீதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றுமுன்தினம் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற குறித்த வைத்தியசாலைக்கு சென்ற தாய்க்கு வயிற்றை வெட்டி சத்திர சிகிச்சை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பெண்ணின் சகோதரர், எதற்காக இந்த சத்திர சிகிச்சை என கேட்டமையினால் சத்திர சிகிச்சை தடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சகோதரர் ஒரு வைத்தியர் என்பதனால், ஆபத்தான சத்திர சிகிச்சை தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.