யாழ் கச்சாய் வீதியில் 31கிலோ கஞ்சா மீட்பு - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, August 6, 2019

யாழ் கச்சாய் வீதியில் 31கிலோ கஞ்சா மீட்புகொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில் நேற்று(திங்கட்கிழமை) இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 31 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் இவற்றை கைப்பற்றி கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்தேக நபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 60 இலட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை ‘ஏ’ அறிக்கை மூலம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.