கோத்தாபய ராஜபக்சவை கொலை செய்தால் மட்டுமே அவர் ஜனாதிபதியாவதை தடுக்க முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்,
கோத்தாபய செல்லும் இடங்களில் அவரைச் சுற்றி இருப்போர் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியமானது.
அவர் ஜனாதிபதி வேட்பாளராக பல இடங்களுக்கு செல்கிறார் எனவே அனைத்து இடங்களையும் பரிசீலனை செய்து புலனாய்வுத் தகவல்களை பெற்றுக் கொள்ள அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும்.
இது குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்துவார் என நம்புகிறோம். என்றார்