ஏப்ரல் குண்டு தாக்குதல் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடத்தப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஹொக்கந்தர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.
தற்கொலைதாரி சஹ்ரான் திடீரென உருவாகியமைக்கு என்ன காரணம் என வினவிய அவர் அவருக்கு அதுவரை எந்தவொரு கோரிக்கையும் இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும்,
தாக்குதலுக்கான உரிமையை ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஏற்ற போதிலும் அவர்கள் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் 2015 ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்காக வேலை செய்தாகவும் அவர் தெரிவித்தார்.
சஹ்ரான் உள்ளிட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர செயற்பட்டதாக சாய்ந்தமருது மக்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டில் குண்டு தயாரிப்பிற்கான பொருட்களை நாட்டுக்கு கொண்டுவந்ததுடன் அப்போது அவர்களுக்கு எதிராக பொலிஸார் செயற்படவில்லை எனவும், அவசர தருணங்களில் ஆட்சியை காப்பாற்றும் சக்தியாக சஹ்ரானை பாவித்தாகவும் கூறினார்.
சஹ்ரான் பின்னால் மேற்குலக நாடுகள் இருந்தாகவும் அவர்களே ரணில் விக்ரமசிங்க என்ற பொம்மையை பிரதமராக்கியதாகவும் அவர்கள் அதனூடாக நாட்டை கைப்பற்ற முனைவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள பல இடங்களை கையகப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா விசேட காணிச்சட்டத்தை கொண்டுவர உதவியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.