பொதுபல சேனாவின் முக்கிய உறுப்பினர் விஜித தேரரை கடத்திச் செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுருகிரிய – போரே கல்பொத்த மாவத்தையிலுள்ள ஸ்ரீ தம்மவிஜிதாசிரம விகாரையின் விகாராதிபதி விஜித தேரரே கடத்திச் செல்வதறகு முயற்சிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத குழு கடந்த 10ஆம் திகதி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
விகாரைக்கு அருகிலுள்ள ஒரு கடையில் இக்குழு குறித்த தேரரின் புகைப்படத்தைக் காட்டி தகவல் கேட்டுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து விஜித தேரருக்கு வேறு ஒரு தேரர் மூலம் தகவல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்தே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.