ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் தற்போது 28 வருடங்களுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதில் தண்டனை பெற்று வரும் நளினி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் பதிலைக் கேட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு. ”உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக ஆளுநர் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும். தண்டனைக் காலம் முடியும் முன்பு விடுதலை செய்வது குறித்து அரசு எவ்வித முடிவும் எடுக்க முடியாது. ஆயுள் தண்டனை கைதிகளுக்கு விடுதலையை தங்கள் உரிமையாகக் கோரிக்கை வைக்க முடியாது” எனப் பதில் அளித்தது.