தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 3, 2019

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா!


தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமையவே அவர் பதவி விலகியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி தென் மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னக்கோன் நியமிக்கப்பட்டிருந்தார்.

தென் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவுடன் மாகாண சபை கலைக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து மாகாண சபையின் அதிகாரமும் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனின் வசமிருந்தமை குறிப்பிடத்தக்கது.