இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 3, 2019

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!



இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரம், ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவு சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்றும் இன்று திருகோணமலையில் மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.