மகிந்த வீட்டில் ஒட்டுக்குழுக்கள் அடைக்கலம் ~ பாரிய திட்டமிடல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 6, 2019

மகிந்த வீட்டில் ஒட்டுக்குழுக்கள் அடைக்கலம் ~ பாரிய திட்டமிடல்

வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு நிச்சயம் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தீர்வு முன்வைக்கப்படும்.

தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இடம் பெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் வினவிய போதே ஜனநாயக மக்கள் காங்கிரின் தலைவர் பிரபா கனேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுவதற்காக நடப்பு அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதுவரையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் வெற்றி இலக்கினை மாத்திரம் இலக்காக கொண்டு தமிழ் மக்களிடம் போலியான வாக்குறுதிகளை வழங்குவதை அனைத்து அரசியல்வாதிகளும் முதலில் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

ஈ.பி.டி .பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , பிரபா கணேசன் ,டியூ குணசேகர,திஸ்ஸ விதாரண,ராஜா கொல்லூரே , அருண் தம்பிமுத்து, ரி.சிறீதரன்,பி.உதயராசா, வரதராஜ பெருமாள் உட்பட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.