அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக சஜித் பிரேமதாசவை விட பலம்மிக்க வேட்பாளரை கட்சி நிறுத்தும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், சரியான நேரம் வரும்போது பொருத்தமான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்காலத்தில் சிறந்த வேட்பாளரை களமிறக்க அனைவரும் ஒண்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் தனக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே விரிசல் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தான் மறுப்பதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு சில ஊடக நிறுவனங்கள் பல்வேறு மோதல்களை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.