யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரியும் முப்படைகளின் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா சிறிலங்காவின் இராணுவதளபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிள்ளன.
சிறிலங்காவின் தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவிற்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்துள்ளபோதிலும் அதற்கான சாத்தியம் இல்லை என பாதுகாப்பு மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை சவேந்திர டி சில்வா மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலை காணப்படுகின்றது.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசவேந்திர டி சில்வா சிறிலங்காவின் இராணுவதளபதியாக நியமித்தால் ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடனானசிறிலங்காவின் தொடர்புகள் முற்றாக தடைபடலாம்.
யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான அரசாங்க படையினருடன் ஐக்கிய நாடுகள் தொடர்புகளை பேணுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த நிலை உருவாகலாம்.
இதேபோன்று இலங்கையுடனான அமெரிக்காவி;ன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும் பாதிக்கப்படலாம்
சவேந்திரசவேந்திர டி சில்வாவிற்கு கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியவேளை சர்வதேச அளவில் இதற்கு கடும் எதிர்ப்பு உருவானது குறிப்பிடத்தக்கது.