தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தக்க பதில் வழங்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு வருகை தந்துள்ள விஜய் சேதுபதி விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டார்.
இதன்போது இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுபோன்று தேசிய தலைவர் பிரபாகரனை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதலளித்த விஜய் சேதுபதி, பிரபாகரன் போன்ற மாபெரும் தலைவரை இதுபோன்று நிகழ்வுகளில் பேசி அவரை சிறுமைப்படுத்த வேண்டாம்.
அதற்கான களம் இதுவல்ல. எனினும் பெரும்தலைவர்கள் தொடர்பான திரைப்படங்கள் சரியான முறையில் யாரும் கொண்டு வருவதில்லை. அவ்வாறு அமைந்தால் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
மெல்பேர்ணில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா இம்முறையும் கோலகலமாக நேற்று நடைபெற்றது.
திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்ட சூப்பர் டியுலக்ஸ் படக்குழுவினர் இன்று விசேட சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர். இதன்போது விஜய் சேதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.
நிகழ்வில் சூப்பர் டியுலக்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகை காயந்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.