26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 24, 2019

26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதைஇலங்கையின் 26 வயது இளைஞரை திருமணம் செய்த ஸ்கொட்லாந்தின் 61 வயது பெண்ணின் துயரக்கதையை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

எட்டு வருடங்களின் முன்னர் இந்த திருமணம் நடந்தது. அப்போது சமூக ஊடகங்களில் இந்த செய்தி மிக வைரலாகியிருந்தது. மணப்பெண்ணிற்கு 61 வயது.

மாப்பிள்ளைக்கு வயது 26. அவர்களின் வயது இடைவெளி 35 ஆண்டுகள். ஆனால் அந்த இடைவெளி இருவருக்குமான காதலுக்கு அப்போது தடையாக இருக்கவில்லை. ஆனால் அந்த காதல் நீடித்ததா? கதையின் முடிவு மகிழ்ச்சியாக இருக்கிறதா?.

காதல் கதை அழகாக இருந்தாலும், முடிவு இனிமையாக இல்லை. அந்த முடிவு சோகம் நிறைந்தது.

ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரைச் சேர்ந்தவர் டயான் டி சொய்சா.1 வயது பிரிட்டிஷ் பெண். அவர் இலங்கை குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

தவறாமல் அடிக்கடி இலங்கைக்கு பயணம் செய்தார். ஸ்கொட்லாந்தில் இருந்து இலங்கை பயணமாகி, இரண்டு வார காலம் தங்கியிருப்பது மிகப்பெரிய செலவு.


அத்தகைய ஒரு பயணத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் வரை செலவாகும். ஆனால் பணத்தைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காத டயான் டி சோய்சா பெரும்பாலும் இலங்கைக்கு வந்து தெற்கிலும் மத்திய மலைநாட்டின் ஹொட்டல்களிலும் தங்கியிருந்தார்.

அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்தபோது அஹுங்கல்லவில் ஒரு ஹொட்டலில் தங்க வேண்டியிருந்தது.

அந்த ஹொட்டலில், சிறப்பு வாய்ந்த ஒருவரை சந்திக்கிறார். அவன் பெயர் பிரியஞ்சன. 26 வயதுடைய இளைஞன். சுற்றுலா வழிகாட்டி.

அவர்களுக்கு இடையேயான வயது இடைவெளி 35 ஆண்டுகள். இருவரின் முதல் சந்திப்பு மிகவும் சாதாரணமாகதாக இருந்தது.

தெற்கில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி டயான் கேட்கிறார். பிரியஞ்சன பல இடங்களிற்கும் அவரை அழைத்து சென்றார்.முதல் சந்தர்ப்பத்தில், அவர்களது உறவு- ஒரு வெளிநாட்டு பெண் மற்றும் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியாக மட்டுமே இருந்தது. பின்னர், அது படிப்படியாக நட்பாகவும் பின்னர் அன்பாகவும் மாறியது. அவர்களுக்கு இடையேயான 35 வயது இடைவெளி அவர்களின் காதலுக்குத் தடையாக இருக்கவில்லை. டயான், பிரியஞ்சனவை மிகவும் நேசித்தார். 


ஆனால் பிரியஞ்சன, டயானை நேசித்தாரா? அதை இப்பொழுது சொல்ல முடியவில்லை. இருப்பினும், பிரியஞ்சன தன்னை நேசிப்பதாக டயான் நினைத்தார். அவர்கள் ஏற்கனவே டேட்டிங் தொடங்கியிருந்தார்கள்.

ஒரு வருடம் கழித்து, பிரியன்சனவுடன் தொடர்ந்து வாழ டயான் முடிவு செய்தார். பிரியன்சனவுடனான கடைசி சந்திப்புக்குப் பிறகு ஸ்கொட்லாந்து சென்றபோது அவர் இந்த முடிவை எடுத்தார்.

எனவே சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கைக்கு வந்து பிரியன்சனவிடம் சொல்கிறார். பிரியஞ்சன அவரை இலங்கையில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

முதலில், டயான் தயங்குகிறார். ஆனால் பிரியஞ்சனவின் வேண்டுகோளை தட்ட முடியாத நிலையில் ஒப்புக்கொள்கிறார்.“நாங்கள் 2012 இல் திருமணம் செய்துகொண்டோம். அதாவது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு. திருமணத்திற்கு முந்தைய நாள் பிரியன்சன மிகவும் பதட்டமாக இருந்தார்.

திருமண நாளில் பதிவாளர் முன்னிலையில், அவரும் நானும் ஒருவருக்கொருவர் கணவன்-மனைவியாக ஏற்றுக்கொள்வோம் என்று சத்தியம் செய்தோம்“. என அந்த நாளை டயான் நினைவுகூர்ந்தார்.

எனினும், அந்த திருமண ஒப்பந்தம் தனக்கு அழிவாக அமையுமென அவர் நினைக்கவில்லை.

தன் வாழ்க்கையின் மாலையில், அன்பின் சூரியன் விழுந்தது என்று அவர் நினைத்தார். ஆனால் மாலையில் இருட்டாக இருக்கும் என்றும் சந்திரன் தெரியாவிட்டால் அவள் இருட்டில் தொலைந்து போவேன் என்றும் அவர் கற்பனை செய்திருக்க மாட்டார்.

திருமணத்தின் பின்னர் அவர் செய்த முதல் விஷயம் ஸ்கொட்லாந்தில் உள்ள தனது சொத்தை விற்று அந்த பணத்துடன் அவர் 2015 ல் இலங்கைக்கு வந்தார்.

அதிலிருந்து அவள் பிரியாஜனுக்கு ஒரு வீடும் ஒரு சிறிய ஹூண்டாய் காரும் வாங்கினார். காரிற்காக 31,000 பவுண்ஸ் செலவிட்டார். வீட்டுக்காக 60,000 பவுண்ஸ் செலவிட்டார். இதன்மூலம் டக்ஸி ஓட்டுனராகவும் பிரியன்சன மாறினார்.

இது தவிர, கடந்த வருடம் 100,000 பவுண்ட் பிரியன்சனவிடம் கடனாக கொடுத்தார்.

திருமணத்தின் பின்னர் டயான் அஹுங்கல்லயில் ஒரு தற்காலிக லொட்ஜில் வாழ்ந்தார். பிரியன்சனவின் தாயும் குடும்பத்தினரும் டயான் வாங்கிய வீட்டில் வசித்தார்கள்.


திருமணத்திற்குப் பிறகு டயானை சந்திப்பதை குறைத்துக் கொண்டார் பிரியன்சன. தனது தாயின் வீட்டில் இரவைக் கழித்தார்.

பிரியங்கனுடன் திருமணம் செய்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 இல், பிரியஞ்சன வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் டயான் இதைப் பற்றி கேட்கவில்லை.

பிரியஞ்சனவுடன் சண்டையிடவில்லை. ஆனால் அவர்கள் மத்தியில் எப்போதும் குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக பணம் தொடர்பாக. டயானிடமிருந்து தொடர்ந்து பணத்தை பிரியஞ்சன எதிர்பார்த்தார்.

இதற்குள், பிரியஞ்சன திடீர் பணக்காரனானது உள்ளூரில் பொறாமையை ஏற்படுத்தியது. உள்ளூர் தாதாக்கள் சிலர் பிரியன்சனவிடம் மிரட்டி பணம் பெற முயன்றனர்.

அவர் சிறிதளவு பணத்தை அவர்களிற்கு கொடுத்தார். அவர்கள் இன்னும், அதிகமாக எதிர்பார்ப்பதாக பிரியன்சன தன்னிடம் சொன்னதாக, டயான் கூறுகிறார்.

இந்த நிலையில்தான் பிரியஞ்சனவை இனம் தெரியாதவர்கள் சுட்டுக் கொன்றனர். கணவன் சுடப்பட்ட செய்தியறிந்த டயான் வைத்தியசாலைக்கு சென்றபோது, பிரியன்சன உயிரிழந்து விட்டார்.

பிரியன்சனவை திருமணம் செய்ய முயன்றபோது, ஆரம்பத்தில் தனது நண்பர்களும், குடும்பத்தினரும் எதிர்த்ததை குறிப்பிட்டார்.

பணத்திற்காக பிரியன்சன திருமணம் செய்ய முயல்கிறார் என அவர்கள் குறிப்பிட்டார்கள், ஆனால் அவர்கள் பிழையான சிந்தித்தார்கள் என்பதை நிரூபிக்க விரும்பினேன். பிரியன்சனவை நானும் ஆழமாக நேசித்தேன் என்கிறார்.


எனினும், தன்னிடம் தொடர்ந்து பெருந்தொகை பணத்தை பிரியன்சன கறந்து வந்ததையும் இப்பொழுது சோகத்துடன் நினைவுகூர்கிறார்.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், டயான் இப்பொழுது இலங்கையில் சிக்கிவிட்டார். மீண்டும் ஸ்கொட்லாந்து செல்ல அவரிடம் பணமில்லை.

தனது உடமைகளை அனுப்பி வைக்கவும், விமான பயணத்திற்கும் பணமில்லாமல் திண்டாடி வருகிறார்.

பிரியன்சனவிற்காக வாங்கிய வீடு, வாகனத்தை விற்க முடியாது என பிரியன்சனவின் தாயார் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

ஆழமான பெரும் காதலுடன் ஸ்கொட்லாந்தில் சொத்துக்களை விற்றுவிட்டு வந்த டயான் இப்பொழுது பாதுகாப்பான தங்குமிடம் கூட இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய துயரம்.