தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வீட்டில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற கட்டளையைப் பெற்று இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, வட்டக்கச்சியில் உள்ள அவரது வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறிதரனின் வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற இராணுவம், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து கூட்டுச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.