சிறீலங்கா ஜனாதிபதிக்கும் தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு எஞ்சியிருக்கும் காலத்தில் முழுதாக நிறைவேற்றப்படும்.
என நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபை மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “மைத்திரி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றே ஜனாதிபதியாக தெரிவானார்.
அவர் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னரான யாழ். விஜயத்தின்போது, எங்களிடம் ஒரு இணக்கப்பாடு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவரிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி,ஆம் அவை எழுத்துமூலம் இல்லை என்றாலும் என் மனதில் உள்ளதென தெரிவித்தார்.
அதற்கமைய அவருடன் 4 வருடங்கள் பயணித்தோம்.முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் இன்றும் சிறிது காலங்கள் இருக்கின்றன.அந்த காலத்துக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என மேலும் தெரிவித்தார்