வவுனியாவிற்கு அண்மையில் விஜயம் செய்த ரணில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்ப அங்கத்தவர்களை இரகசியமாக சந்திக்க முற்பட்டமை அம்பலமாகியுள்ளது.
ரணிலின் வருகையின் போது எதிர்ப்பு போராட்டத்தில் குடும்பங்கள் ஈடுபட்டிருந்த போது புலனாய்வு கட்டமைப்பு அதிகாரிகள் போராட்ட மையத்திற்கு சென்று சந்திப்பதற்கான நேரத்தை கோரியிருந்தனர்.
அதிலும் ரணில் வைத்தியசாலையில் வைத்து போராட்டத்தில் குதித்துள்ள ஜந்து பெற்றோரை மட்டும் சந்திக்க அழைத்துள்ளார்.எனினும் அதனை மறுதலித்த குடும்பங்கள் போராட்டத்தை முன்னெடுத்துவரும் கொட்டகைக்கு ரணில் வருகை தந்தால் மட்டுமே பேச முடியுமென தெரிவித்துள்ளனர்.
எனினும் அதனை ரணில் மறுதலித்துள்ளார்.இதன் மூலம் 900 நாட்கள் தாண்டிய போராட்டத்தை கண்டுகொள்ளாதிருக்கின்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை ரணில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.