நாளை நல்லூரில் மௌன பேரணி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 2, 2019

நாளை நல்லூரில் மௌன பேரணி!


தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைத்தல் உட்பட பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஆட்சேபித்தும் இந்து ஆலயங்கள் பாதிப்புக்குள்ளாவதானால் அச்சமடையும் இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் அமைதி வழியிலான மௌன பேரணி நாளை சனிக்கிழமை காலை 9மணி தொடக்கம் 10மணி வரை நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ளது.

இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் என்ற வகையில் சகல சைவ பெருமக்கள் அனைவரையும் இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

இந்த பேரணி எந்தவொரு அரசியல் கட் சியும் சார்ந்தது அல்ல என்றும், இந்து அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் இந்து சமயபேரவை ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வாக இது அமையுமென்றும் தெரிவித்துள்ளார்.