இந்திய இராணுவத்தின் துணையுடன் E.P.R.L.Fசெய்த இரக்கமற்ற செயல் வல்லை படுகொலை அரங்கேற்றப்பட்டு 3 தசாப்தங்கள் சென்றாலும் எம்மவர் நெஞ்சங்க்களில் ஆறாத வடுவாக இன்றும் அந்த வலிகள் மாறாது இருக்கின்றது.
வல்வெட்டித்துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் படையினருடன் இணைந்து அரங்கேற்றிய கொடூரம் 71 அப்பாவிப் பொதுமக்களின் படுகொலை தினம் இன்றாகும்.
கடந்த 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 2ஆம், 3 ஆம், 4 ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துவிட்டு இந்த மிலேச்சத்தனமான கொலைகளை அரங்கேற்றினார்கள்.
வல்வைப் படுகொலைகளின் நினைவு தினமான இன்று இந்தப் படுகொலைகளின் பொழுது துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட 71 அப்பாவிப் பொது மக்களுக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்து அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்.