கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 2, 2019

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து!


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கோட்டாபயவிடம் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. மாத்தறை மாவட்டத்தில் 1949 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி பிறந்து, சிறிலங்கா குடியுரிமையை கொண்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அமெரிக்க குடியுரிமை கிடைக்கப் பெற்றது. 

அன்று முதல் சுமார் 16 வருடங்கள் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அதனை ரத்து செய்யுமாறு இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். 

கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.