தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விடிவு கிடைக்குமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் காலத்திலேயே அது முடியும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்டதாரிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து
முன்கொண்டுவரும் தலைமைக்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மூன்று தேர்தலுக்கு இந்த நாடு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் சமூகம் ஒன்றிணைந்து கடந்த காலத்தில் எவ்வாறு செயற்பட்டீர்களோ அந்த பணியை நீங்கள் செய்யவேண்டும்.
கடநத காலத்தில் பட்டதாரிகள் போராட்டங்களை நடாத்தியபோது பல அரசியல்வாதிகள் வந்து பல படங்களை காட்டினார்கள். ஆனால் அந்த படங்களை இன்றைய நாளில் அவர்களுக்கு காட்டமுடியாமல்போனது.
எதனைச் செய்தாலும் இந்த அரசியல் தலைமைகள்தான் ஏதாவது உங்களுக்கு பெற்றுத்தரமுடியும். ஆகவே இந்த அரசியல் தலைமைகள் எடுக்கும் எதிர்கால முடிவுகளுக்கு சிறுபான்மை சமூகத்திற்கு எது நல்லது என எடுக்கும் முடிவுகளுக்கு நிங்கள் அனைவரும் ஒன்றுதிரண்;டு வாக்களிக்கும் மக்களாக இருக்கவேண்டும்.
கடந்த தேர்தல்களை விட அதிகளவில் வாக்களிக்கவேண்டிய இக்கட்டான நிலையில் நாங்கள் இருந்துகொண்டிருக்கின்றோம்’ என குறிப்பிட்டுள்ளார்