யாழில் கோவில் திருவிழாவுக்குள் புகுந்து சிங்கள காடையர்கள் தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 5, 2019

யாழில் கோவில் திருவிழாவுக்குள் புகுந்து சிங்கள காடையர்கள் தாக்குதல்!

யாழ் நெல்லியடி நவிண்டில் அம்மன் கோவிலில் நடந்து கொண்டிருந்த தமிழரின் இசைக்கச்சேரி நிகழ்வை மது போதையில் வந்த சிங்களக் காவல் துறையின் சிவில் உடையில் வந்த நபர்கள் நிறுத்த சொல்லியவுடன் இசைக்கச்சேரி நிறுத்தப்பட்டது. நிகழ்வு நிறுத்தியவுடனும் மேடையில் நின்றவரை இழுத்து அடித்துள்ளனர். அத்துடன் அவர்களின் ஒலி அமைக்கும் பொருட்களும் சிங்களவர்களால் உதைத்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தனர். நான்கு மது அருந்திய சிங்களக்காவல் துறையினர் தமிழர் பகுதிகளில் செய்யும் செயல்கள் தமிழ் மக்களை கொதிப்படையசா செய்துள்ளது.