யாழில் இராணுவத்தினர் குவிப்பு! தி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 5, 2019

யாழில் இராணுவத்தினர் குவிப்பு! தியாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா  நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் காவல் துறை  பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றன.

சோதனையிடப்படுவோரின் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றது.

இலங்கையில் வணக்கஸ்தலங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.