ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோட்டாபயவே சூத்திரதாரி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 20, 2019

ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோட்டாபயவே சூத்திரதாரி!


வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் காரணமாக அமைந்தவர் கோட்டாபய ராஜபக்‌ஷ என்பதே உண்மையென, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் தெரிவித்தார்.

இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டாபயவை ஆதரிக்கக் கூடியவாறு தமிழ்த் தலைமைகள் தங்களது கருத்துகளைச் சொல்வதில், சரி பிழை  இருக்கலாம். ஆனால், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அதை ஏற்றுவிடமாட்டார்கள் என்றார்.

இம்முறை தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதிக்கு எந்தளவு அதிகாரங்கள் இருக்கின்றன, நாடாளுமன்றத்துக்கு எந்தளவுக்கு அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை பொறுத்தே, தமிழ் கட்சிகள், தமிழ் மக்களின் வாக்குகளை ஆணையிடத் தயாராக இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.  

ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு உடந்தையாகி விடக் கூடாது. அப்படி ஏமாற்ற நினைத்தால், வடக்கு, கிழக்கு மக்கள் அதை நிராகரிப்பார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில், காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முடக்கிவிட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை முறியடிக்காவிட்டால், தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்படுவரெனவும் இவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்