கூட்டமைப்பை 19 தடவை ஏமாற்றினார் மஹிந்த! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 20, 2019

கூட்டமைப்பை 19 தடவை ஏமாற்றினார் மஹிந்த!



எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 19 தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களை ஏமாற்றியதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பார்வீதியின் குறுக்கு வீதியை புனரமைக்கும் பணிகள் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டு இந்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ காலத்திற்கு காலம் மாறிமாறி பேசி இரட்டை வேடம்போடுவதகாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் எந்த கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவில்லையெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.