தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக்கொள்ள தயார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 2, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக்கொள்ள தயார்


தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக்கொள்ள தயார் என தமிழர் விடுதலை கூட்டணி தெரிவித்துள்ளது.

கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் மலையக மக்களுக்கு உதவக் கூடியவராக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு வடக்கிற்கு வருகை தரும் அரசியல்வாதிகள் வரலாறு தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.