மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் காரணமாக மட்டக்களப்பு – திருகோணமலை உட்பட பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தமையினால் இந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது ஆதவன் பிராந்திய செய்தியாளர் கூறினார்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிப்பு – மட்டக்களப்பில் பதற்றம்
மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளமையினால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு இந்து மயானத்தில் தாக்குதல் தாரியான மொஹமட் அஸாத்தின் உடற்பாகம் புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தற்போது வீதிகளில் டயர்கள் எரிந்து போராட்டம் இடம்பெறுவரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு அதவனுடன் இணைந்திருங்கள்