பேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 27, 2019

பேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

பேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த என். டபிள்யூ. அமில நிரோசன் (18 வயது) என கூறப்படுகிறது.

பேஸ்புக் மூலமாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார் குறித்த இளைஞர். பின்னர் யுவதியிடம் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த இளைஞன் தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கன்தளாய் வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.