திருமலையில் 15 மீனவர்கள் கடற்படையால் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 23, 2019

திருமலையில் 15 மீனவர்கள் கடற்படையால் கைது!


தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் நேற்று (22) திருகோணமலை வலல்தோட்டம் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதன்படி, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள் திருகோணமலை வலல்தோட்டம் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் போரின் போது கிழக்கு கடற்படைத் கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். 

அங்கு அவர்களிடம் இருந்து 3 டிங்கி படகுகள், 3 தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றியது.