கணவனால் தீவைத்து கொளுத்தப்பட்ட வட்டுக்கோட்டை ஐயனார் கோவில் அராலி கிழக்கை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயாரான சண்முகநாதன் அருகு (32) என்பவரே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
கடந்த 30ம் திகதி இரவு குறித்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தின்போது, மனைவி உணவு உண்டுகொண்டிருந்துள்ளார்.
உணவை பறித்து தலையில் கொட்டிய அவர், மனைவியை தாக்கியுள்ளார்.
மனைவி கீழே விழுந்ததும் மண்ணெண்ணை எடுத்து அவர்மேல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதை பார்த்த 14 வயதுடைய மகன் தாயை கட்டியணைத்து, தீயை அணைக்க முற்பட்டுள்ளார். எனினும், மகனையும் தாக்கிய தந்தை, தீயை அணைக்க விடாமல் தடுத்துள்ளார் .
தகப்பனின் கையை கடித்துவிட்டு, மகன் தீயை அணைத்து அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.
யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்