2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்குள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, July 6, 2019

2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் இலங்கைக்குள்

சோபா உடனபடிக்கையில் கைச்சாத்திடுவதன் ஊடாக 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமென ஜனாதிபதியின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, சோபா, அக்சா மற்றும் மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றபோதே காலிங்க இந்ததிஸ்ஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ அரசாங்கம் இந்த சோபா உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவம் சீருடை தரித்து ஆயுதத்துடன் நடமாடும் நிலைமை உருவாகும்.

மேலும் பயங்கரவாதிகளும் எந்ததொரு தடைகளும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பாக அமையும்.

அந்தவகையில் சோபா உடன்படிக்கை நாட்டுக்கு பாரியளவில் பாதிப்பையே ஏற்படுத்தும்” என காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்